தார்சாலை அமைக்க பூமி பூஜை- ஓசூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முத்தாளி முதல் கொத்தூர் கிராமம் வரை சுமார் 78.86 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. ஓசூர் எம்எல்ஏ. ஒய். பிரகாஷ் இந்த பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி