கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் தலைமையில் திமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.