போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி

தர்மபுரி, மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் மாதையன் (45). இவர், போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் அடுத்த உள்ள மொழிவயனூர் முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அன்று காலை கோவிலில் பூஜை செய்ய சென்ற போது கோவிலின் பின்புறமாக இருந்த, இரும்பு கதவை அவர் தொட்டபோது அதில் கசிந்த மின்சாரம் தாக்கியதில், மாதையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி