பர்கூர் அருகே புதிய மின்மாற்றியை துக்கி வைத்த எம். எல். ஏ.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒப்பதவாடி ஊராட்சியில், தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் தாழ்வழுத்த மின்சாரக் குறைபாட்டைப் போக்கி, புதிய மின்மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் இதில் கலந்துகொண்டு புதிய மின்மாற்றியைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இது அப்பகுதி மக்களின் மின்சாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

தொடர்புடைய செய்தி