கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடாராஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரி கரை மீதுள்ள மின் கம்பம் சிமென்ட் பூச்சு உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.