விருதுநகரில் நடைபெற்ற மாநில மட்டைப்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி +1 மாணவி தேஜஸ் ஸ்ரீ கலந்து கொண்டு தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.