கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் இன்று (நவ.4) காலை தனியார் பள்ளி பஸ் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 4 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பஸ் மாதம்பதி கிராமத்திற்கு செல்லும்போது, ஓசூர் நோக்கி சென்ற கார் ஒன்று பஸ் மீது மோதியது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.