பர்கூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர், கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, தொட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி