குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யவும், நகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் சாக்கடை வசதிகளை தரமான முறையில் அமைக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி