கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் கருணாகரன்-சாவித்திரி தம்பதியினர் வீட்டில், நேற்று (ஆகஸ்ட் 17) இரவு 3 மர்ம நபர்கள் புகுந்து, அவர்களின் மகள் அபர்ணாவை கட்டி வைத்து தாக்கி, வீட்டில் இருந்த 31 பவுன் தங்கம் மற்றும் 9 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்பி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.