கரூர்: கிராவல் மண் கடத்தல், ஜேசிபி வாகனம் பறிமுதல்

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா நங்கவரம் அருகே களத்துப்பட்டி பகுதியில் உள்ள முத்துசாமி என்பவரின் பட்டா நிலத்தில் அரசு அனுமதி இன்றி கிராவல் மண் கடத்த ஜேசிபி கொண்டு கிராவல் மண் குவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நெய்தலூர் தெற்கு விஏஓ ராமதாஸ் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நங்கவரம் போலீசார் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த மனோஜ் 29, நிலம் உரிமையாளர் முத்துசாமி மற்றும் பெயர் தெரியாத ஜேசிபி உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து ஓட்டுநர் மனோஜை கைது செய்தனர். மேலும் ஒரு ஜேசிபி வாகனம் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி