கிருஷ்ணராயபுரம்: சாட்டை துரைமுருகன் சேனலை முடக்க கோரிக்கை; விசிக புகார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், தனது யூடியூப் சேனலில் விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து, அந்த யூடியூப் சேனலை முடக்கி, சாட்டை துரைமுருகன் மற்றும் உமாய்தீன் இக்பால் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என விசிக சார்பில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி தலைமையில் குளித்தலையில் காவல் துணை கண்காணிப்பாளரிடமும், குளித்தலை காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி