கரூர்: காதலி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய காதலன்

கரூர் குளக்காரன்பட்டியைச் சேர்ந்த பிபார்ம் 4 ஆம் ஆண்டு மாணவி, அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்தை காதலித்து வந்துள்ளார். ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரியில்லை எனக் கூறி மாணவி காதலை முறித்துக் கொண்டதால், கோபமடைந்த ரஞ்சித், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது கொதித்த எண்ணெயை ஊற்றியுள்ளார். வலியால் துடித்த மாணவி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலவிடுதி போலீசார் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி