மேட்டூரில் இருந்து கரூர் மாயனூர் கதவணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 15602 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி இது 17471 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 860.79 கன அடி. கதவணையில் இருந்து 16001 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதில் தென்கரை பாசன வாய்க்காலுக்கு 650 கன அடி, புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு 800 கன அடி, கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலுக்கு 20 கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.