கடந்த 13.02.21 ல் காத்தான் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் செப்ளாபட்டியில் உள்ள அவர்களது தோட்டத்தில் நெல் அறுவடை செய்வது தொடர்பாக அவர்களது தம்பியான கந்தசாமியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கந்தசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் காத்தான், சுப்பிரமணி ஆகியோர் 13.02.21 ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு கரூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று (ஜூலை 31) மாலை இவ்வழக்கில் விசாரணை முடிவுற்று காத்தான், சுப்பிரமணி ஆகியோர்க்கு தம்பி கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.50,000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 வருடம் சிறை தண்டனையும் ஏகபோக காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.