கரூர் மாவட்டம் க. பரமத்தி ஆரியூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (33), ஆகஸ்ட் 18 அன்று மதியம் மூன்று மணி அளவில் திண்டுக்கல் - கரூர் சாலையில் டூ வீலரில் சென்றார். டெக்ஸ் பார்க் அருகே சென்றபோது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (38) ஓட்டிச் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், பிரபாகரன் ஓட்டிச் சென்ற டூ வீலர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி காவல் துறையினர், லாரி ஓட்டுநர் முரளி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.