கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோத்ராம் படேல் (32) என்பவர் ஓட்டி வந்த காரில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் 10.800 கிலோ குட்கா மற்றும் ரூ.2,06,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோத்ராம் படேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.