அரவக்குறிச்சி: நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, அபீப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி மனைவி மாரியம்மாள் (74). இவர் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள வளர்பிறை மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அரவக்குறிச்சி பாபா நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (27). என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர் நடந்து சென்ற மாரியம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் மாரியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த மாரியம்மாளின் மகன் சிவபெருமாள் (42) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி