கொல்லங்கோடு: 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்

நீரோடி சோதனைச் சாவடியில் இன்று காலை இரணியல் காவல் நிலைய போலீஸ் ராஜேஷ் பணியில் இருந்தபோது, சொகுசு காரில் கேன்களில் மண்ணெண்ணெய் அடுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தார். வாகனத்துடன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கொல்லங்கோடு போலீசார் நடத்திய சோதனையில், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 கேன்களில் சுமார் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்தி