பத்மநாபபுரம்: கொலை முயற்சி; வலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பவரை, காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த சஜிவன் ராஜ் (27) என்பவர் 2023-ம் ஆண்டு கொல்ல முயன்ற வழக்கில், பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றம் இன்று (5-ம் தேதி) சஜிவன் ராஜுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஏற்கனவே போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளியான சஜிவன் ராஜ் மீது தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி