அருமனை: கார் பள்ளி வாகனம் மோதி விபத்து

அருமனை அருகே கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த அஜிஸ் என்பவர் காலை காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பள்ளி வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரை ஓட்டி வந்த அஜிஸ் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மற்றும் பள்ளி வாகனமும் சேதமடைந்தன. அருமனை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி