கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், குங்குமம், பன்னீர், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தேசியக்கொடி போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.