நாகர்கோவில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று (நவ. 5) நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மனு அளித்தனர். ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்த அருணா பழனிச்சாமி என்பவர், அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் சுமார் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.