நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்த் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு தமிழக அர சால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த மீனாட்சிகார் டன் 3-வது தெருவைச்சேர்ந்த சரவணன் (வயது 28) என்ப வரைகைதுசெய்தார். மேலும் அவரிடம் இருந்து ரூ. 400 மதிப்புள்ள 10 லட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா அருகில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த வெங்கடேசன் (34) என்பவ ரும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 400 மதிப்புள்ள 10 லாட்டரி சீட்டுகளையும், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.