நாகர்கோவில் கூட்டுறவு இணைபதிவாளர் நடுக்காட்டுராஜாவை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் மற்றும் பிரின்ஸ் எம்எல்ஏக்கள் உட்பட 12 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நாகர்கோவில் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்எல்ஏ உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிரின்ஸ் எம்எல்ஏ மட்டும் ஆஜராகவில்லை.