அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து, நேற்று (30-ம் தேதி) திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வாவறை ஊராட்சி தலைவர் மெட்டில்டா தலைமை வகித்தார். ராஜேஷ் குமார் எம்எல்ஏ புதிய ரேஷன் கடை திறந்து வைத்து முதல் விற்பனை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை ஒன்றிய கவுன்சிலர்கள் கிரிஸ்டல் பாய், வெஞ்சஸ்லாஸ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், ஊராட்சி உறுப்பினர்கள் விமலா, டைசி, சுவாமிதாஸ், பிரின்ஸ் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.