குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்த துயர சம்பவம் தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி