இரணியல் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கோர்ட் உத்தரவுப்படி பார் மூடப்பட்ட நிலையில், இன்று (2-ம் தேதி) டாஸ்மாக் கடையையும் மூட வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. கட்சியினர் போலீஸ் பேரிகார்டுகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், இரணியல் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.