இந்த நிலையில் தமிழக கேரளா எல்லை பகுதியை சேர்ந்த ஒரு மீன் வியாபாரிக்கும் இந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த வியாபாரி இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்த செல்வதை அப்பகுதியினர் கவனித்து, இளம் பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவர் ரகசியமாக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் மீன் வியாபாரி இளம்பெண் வீட்டிற்கு வந்ததும், கணவரும் பொதுமக்களை சேர்ந்து அவரை மடக்கி பிடித்து அருமனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அருமனை போலீசார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இளம் பெண்ணின் கணவரையும், பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் முடிவில் அந்த இளம்பெண்ணை கணவர் அழைத்து செல்ல மறுத்ததால் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மீன் வியாபாரியை போலீசார் எச்சரித்து விடுவித்தனர். அவரை அவரது மனைவி அழைத்துச் சென்றார்.