இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்.,3) சாரூம்மா வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து இமானுவேல் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர கேட்டு புகார் செய்தார். புகாரின் பேரில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஞானராஜ் வழக்கு பதிவு செய்து மாயமான சாரூம்மாவை தேடி வருகிறார்.