கிள்ளியூர்: வாக்காளர் படிவம் திருத்த பணியை கலெக்டர் பார்வை

குமரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த விண்ணப்ப படிவம் வீடு தோறும் விநியோகிக்கும் நிகழ்ச்சி இன்று 4-ம் தேதி தொடங்கியது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அழகு மீனா நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவம் வீடு வீடாக சென்று வழங்குவதை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி பதிவு அலுவலர் ஈஸ்வரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி