குழித்துறை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை, போதையில் வந்த இளைஞர் ஒருவர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டார். மார்த்தாண்டம் போலீசார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு சிகிச்சையளித்தனர். பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 5 பேர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போதை தெளிந்ததும் அந்த இளைஞர் தப்பிச் சென்றார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.