அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரேஷின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர் நரேஷை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த அருணை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.