மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்திய சர்வதேச காற்றாடி திருவிழாவில் இந்தியா, மலேஷியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் 250க்கும் மேற்பட்ட காற்றாடிகளைப் பறக்கவிட்டனர். இசை நிகழ்ச்சிகள், விற்பனை அரங்குகள் இடம்பெற்றன. இவ்விழா நடத்த நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் இடம் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்காக 1.60 லட்சம் ரூபாய் வாடகை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செலுத்தியதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.