விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்த ஆனந்த்

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி 4 பாயிண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் வருகை தந்துள்ளனர். பொதுக்குழு கூட்டம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என பொது செயலாளர் ஆனந்த் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். கூட்டத்தில் 2,100 பேருக்கு மேல் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குப் பிறகு தலைவர் விஜய்யை சந்திக்க நிர்வாகிகள் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. விடுதிக்குள் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி