வண்டலூர் திருவிழாவில் பிரபல நடிகர்: காட்சி தந்த மலைப்பாம்பு

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் இரணியம்மன் கோயிலில் ஆடி மாத கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் கிங் காங் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிறப்பு பூஜையின்போது மலைப்பாம்பு ஒன்று கோயில் மேற்கூறையில் தோன்றியதால் பக்தர்கள் பரவசத்துடன் வணங்கினர். இந்தக் கோயில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி