செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையத்தின் திறப்பு விழா இன்று (நவ.3) காலை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் முன்னிலையில் காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், போலீஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.