செங்கல்பட்டு: இருளில் மூழ்கிய பாலம்.. வாகன ஓட்டிகள் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினசரி இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், லாரிகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 2016ல், 90 கோடி ரூபாய் மதிப்பில், 1,076 மீட்டர் நீளம்; 19 மீட்டர் அகலம்; நான்கு வழிப் பாதை பாலம் அமைக்கப்பட்டது. 

எப்போதும் போக்குவரத்து இருக்கும் பாலாற்று பாலத்தின் இருபுறமும் 200க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் மின்விளக்குகள் பழுதடைந்தன. பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால், போதிய வெளிச்சம் இன்றி பாலம் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள அனைத்து மின்விளக்குகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி