செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான நேற்று, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர். மேலும், கோவில் உற்சவர் சன்னிதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்போரூர் மற்றும் பிற ஊர்களில் திருமணம் முடித்தவர்களும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.