சூனாம்பேட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பூமி பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு ஊராட்சியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார் ஏற்பாட்டில், ஒன்றிய கழக செயலாளர் சிற்றரசு தலைமையில் நடைபெற்ற இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி