மதுராந்தகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல்

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் புரட்சி பாரத கட்சி நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி