இங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அயல்நாடான இந்தோனேஷியாவில் உள்ள ஜோக் ஜகார்தா என்ற ஊரின் அருகே போரோ புதூர் என்ற புத்தர் நினைவு சின்னத்தின் மாதிரி வடிவம் சுமார் 6 மீட்டர் அளவில் 504 புத்தர் சிலைகள் பொறிக்கப்பட்டு அழகாக காட்சி அளிக்கின்றது சுமார் 7.50 கோடி மதிப்பிட்டில் நிறுவப்பட்டு உள்ளது.
இந்த புத்தர் பயிற்சி மையத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்கு தனிப்பட்ட கட்டணம் எதுவும் கிடையாது. புத்தருடைய போதனைகளையும் அவருடைய கொள்கைகளையும் பின்பற்றுவதுடன் அங்கு வருபவர்களுக்கும் அது போதிக்கப்படுகின்றது. மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மீக உறுதிமொழி போன்ற முறைகள் மூலமாக இங்கு பிரார்த்தனை நடக்கிறது.