காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இளையனார்வேலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி உமாமகேஸ்வரன் (37), செய்யாற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாகரல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.