மதுராந்தகம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுராந்தகத்தில் ஜே.ஜே. அறக்கட்டளை சார்பில், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் ஜெர்லின் ஜோஸ், செயலாளர் ஞானசாந்தி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவ, மாணவியருக்கும் நலிவடைந்த குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி