காஞ்சி: மளிகைக் கடையில் ரூ.1 லட்சம் அபேஸ்

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் ராஜாஜி மார்க்கெட் அருகே 15 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகைக் கடை நடத்தி வரும் பாலமுருகன், இரவு கடையை மூடிவிட்டுச் சென்றார். காலையில் வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி