செங்கை: பேருந்தில் நகை திருட்டு: அதிர்ச்சியில் பெண்!

செங்கல்பட்டு அருகே மையூரைச் சேர்ந்த பிரீத்தி (28), உத்திரமேரூர் அருகே உறவினர் வீட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு அரசு பேருந்தில் வந்து இறங்கினார். பேருந்து நிலையம் அருகே உணவகத்தில் உணவு வாங்கச் சென்றபோது, தனது பையில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. பேருந்தில் பயணம் செய்தபோது நகை திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி