செங்கல்பட்டில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து

செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி அருகே, சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க கார் தடுப்பு சுவரில் மோதி, எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று கார்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி