காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில், பிளஸ் 2 மட்டும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த திருமலை (42) என்பவரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹிலாரினா நளினி ஜோஷிடு நடத்திய ஆய்வில் கண்டறிந்து, பொன்னேரிக்கரை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் திருமலையை கைது செய்தனர். இவர் காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் தெருவை சேர்ந்தவர்.