காஞ்சி: பயன்பாட்டிற்கு வராத புதிய ரேஷன் கடை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில், 30 ஆண்டுகள் பழமையான ரேஷன் கடை சேதமடைந்ததால், புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த புதிய கடை, கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து ஊராட்சி தலைவர், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி