சென்னை: ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம்; பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் இருந்து திருச்சிக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா விமான சேவை, பயணியர் வருகை அதிகமாக இருந்தும், வரும் செப். 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. விமான இயக்க காரணங்கள் மற்றும் கூடுதல் வழித்தடங்களை மேம்படுத்துவதற்காக இந்த சேவை நிறுத்தப்படுவதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் சேவை தொடங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி